சென்னை:-சமூக வலைதளங்களில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக அவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்ற விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள்.
இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய டுவிட்டர் கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என்று விஜய் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி