புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதனால் அவரது உடல் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். ஆனால், யார் மீதும் குற்றம்சாட்டப்படவில்லை.
இத்தகவலை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸ்சி தெரிவித்தார். இதுகுறித்து தேவையான நபர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுனந்தா விஷம் அருந்தி இறந்திருக்கலாம் அல்லது ஊசி மூலம் உடலில் விஷம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி