செய்திகள்,திரையுலகம் காது கேளாதவர் வேடத்தில் நடிகை நயன்தாரா!…

காது கேளாதவர் வேடத்தில் நடிகை நயன்தாரா!…

காது கேளாதவர் வேடத்தில் நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-விஜய் சேதுபதி ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதில் அவர் காது கேளாதவராக வருகிறார். இதுவரை காதலிப்பதும் டூயட் பாடுவதுமாக வந்த நயன்தாராவுக்கு இது வித்தியாசமான கேரக்டராக இருக்கும் என்கின்றனர்.

அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம். அதனால் தான் விஜய் சேதுபதியுடன் நடிக்க அவர் சம்மதித்து உள்ளார். விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கிறது. ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். அந்த படங்களின் வரிசையில் நானும் ரவுடி தான் படமும் இருக்கும் என்று எதிர் பார்க்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி