செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு!…

உலக கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு!…

உலக கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன. இதற்கான அணிகள் நாளைக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உலக கோப்பை போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெறும் 3 நாடுகள் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று மாலை தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் மீண்டு வராவிட்டால் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனுமதியுடன் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி