மும்பை:-11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன. இதற்கான அணிகள் ஜனவரி 7-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதையடுத்து இந்திய அணி இன்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் இருந்து 15 பேர் அடங்கிய இறுதி அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம் வருமாறு:*
தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்தர் ஜடேஜா, ஆர். அஷ்வின், அக்சார் படேல் புவனேஷ் குமார், இஷாந்த சர்மா, முகம்மது சமி, ஸ்டுவார்ட் பின்னி, உமேஷ் யாதவ்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி