மும்பை:-மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில், பிரபல நடிகை கெளஹர் கான் கலந்துகொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அகில் மாலிக், திடீரென்று, கெளஹர் கானின் அருகே சென்று, அவரது கன்னத்தில் அறைந்தார். கெளஹர் கான், அரைகுறை ஆடையில் இருந்ததால், அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார். அவரை, போலீசார் உடனே கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த அகில் மாலிக் கூறியதாவது, கெளஹர் கான் தான், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது, தன் மீது தாக்குதல் நடத்த சொன்னதாகவும், இதனால், தனது பப்ளிசிட்டி அதிகரிக்கும். இதற்கு பிரதிபலனாக, விரைவில் துவங்க உள்ள புதுப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கெளஹர் கான் சொன்னதாக, அகில் மாலிக் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி