அந்த கத்தியை வெளியே எடுக்க முடியவில்லை. இருந்தும் ஆலி வெரியா துணிச்சலுடன் சுமார் 3 மணி நேரம் தனது காரை ஓட்டிக் கொண்டே 97 கி.மீட்டர் தூரமுள்ள டெரேசினா நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர் சில்பர்போ அல்பு குவர்கூ தலைமையில் ஆபரேஷன் நடந்தது. பின்னர் அந்த கத்தி தலையில இருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து ஆலி வெரியா அதிசயமாக உயிர் தப்பினார்.
அவர் தலையில் பாய்ந்த கத்தி 30 செ.மீட்டர் நீளமுடையது. சமையலறையில் பயன்படுத்தக்கூடியது. கத்திக்குத்தில் அவர் கண் சிதைந்து பார்வை இழந்து விட்டார். மேலும் நுகரும் தன்னமையை இழந்து விட்டார். அதனால் அவரால் பொருளை நுகர்ந்து பார்க்கவோ, உணவில் சுவை அறியவோ முடியவில்லை. ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடனும், உயிருடனும் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி