சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டார். கடந்த 2–ந்தேதி விசாரணை தொடங்கியது. அன்றைய தினம் நீதிபதி குமாரசாமி விடுமுறையில் இருந்ததால் நீதிபதி பில்லப்பா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. பின்னர் விசாரணை 5–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இன்று பெங்களூர் ஐகோர்ட்டு சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. முடிவில் சுப்பிரமணியசாமி ஆஜர் ஆகி, இந்த வழக்கின் முதல் புகார்தாரர் நான்தான். எனது குற்றச்சாட்டை லஞ்சஒழிப்பு போலீசார் விசாரித்து வழக்கு தொடர்ந்தனர். எனவே மேல்முறையீட்டு மனு விசாரணையில் என்னையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார்தான். எனவே நீங்கள் வாதாட அனுமதிக்க முடியாது என்றார்.
அப்போது சுப்பிரமணிய சாமி, இதுபோன்ற மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் முதலில் வழக்கு தொடர்ந்தவர்கள் வாதாடியதற்கு சுப்ரீம் கோர்ட்டில் முன் உதாரணம் உள்ளது என்றார். அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்று நீதிபதி கூற, ஆதாரம் எதையும் சுப்பிரமணியசாமி காட்டவில்லை. இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் 6 நிறுவனங்கள் சார்பில் வக்கீல்கள் உதயகுமார், வல்லா, ஜெயக்குமார் பட்டே ஆகியோர் ஆஜர் ஆனார்கள். சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 6 நிறுவனங்களையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடினார்கள். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.b தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் வக்கீல் குமரேசன் ஆஜர் ஆனார். அவர் மேல் முறையீட்டு மனு விசாரணையில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி குமாரசாமி, இந்த வழக்கில் ஏற்கனவே உங்கள் தரப்பு வாதங்களும் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு விவாதத்தில் பலர் பங்கேற்றால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க முடியாது. எனவே இதை ஏற்க முடியாது என்று கூறி அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிறுத்தி வைத்தார்.
ஜெயலலிதா சார்பில் வக்கீல் குமார் ஆஜர் ஆனார். அவர் வாதாடும்போது, ’’இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜர் ஆக இருக்கிறார். எனவே 12–ந்தேதி வரை மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா சார்பில் கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்தார்.அப்போது நீதிபதி குமாரசாமி கூறியதாவது:– இந்த மேல்முறையீட்டு வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தாமதம் ஆகி விட்டது. மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட எந்தவித தடையும் இல்லை. தீர்ப்பை ஏற்கனவே நீங்கள் படித்திருப்பீர்கள். எனவே இன்றே வாதத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் வக்கீல் குமார் வாதத்தை தொடங்கினார். அரசு தரப்பில் வக்கீல் பவானிசிங் ஆஜர் ஆனார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி