சென்னை:-பிரபல நடிகை அசினுக்கு கொச்சி ரவிபுரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி எர்ணாகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. மேலும், வருகிற 14–ந் தேதிக்குள் ரூ.10 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி