வெலிங்டன்:-இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37–வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4–வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2–வது டெஸ்டில் அவர் 33 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். 5 ரன்னை எடுத்தபோது அவர் 12 ஆயிரம் ரன்னை தொட்டார். 130 டெஸ்ட்டில் விளையாடி சங்ககரா 12,028 ரன் எடுத்துள்ளார். அவர் 37 சதமும், 51 அவரை சதமும் எடுத்துள்ளார். டெஸ்டில் 12 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இலங்கை வீரர் ஆவார். உலக அளவில் 5–வது வீரர் ஆவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி