நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம். ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது. இந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும். அதை வலியுறுத்தி, 7-ந்தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
7-ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும், ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன்பிறகு, மார்ச் 16-ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் திட்டமிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி