கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 2.25 ரூபாய் என உயர்த்தியது. டிசம்பர் 2-ந்தேதி 1 ரூபாய் கலால் வரியை உயர்த்தியது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் கூடுதல் வருமானமாக கிடைக்கும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், விலை குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்போது கலால் வரியும் உயர்த்தப்பட்டிருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடுமா? என்பது கேள்விக்குறிதான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி