இந்த விஷயத்தில் அவர் சச்சின் தெண்டுல்கர் பாணியை பின்பற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தெண்டுல்கர், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் போது செய்தியாளர்களை சந்திக்காமல், இப்படி தான் அறிக்கையை மட்டுமே வெளியிட்டார். தவிர சமீப காலமாக டெஸ்டில் டோனி ரொம்பவே தடுமாறினார். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் அவருக்கு அடிமேல் அடி விழுந்தது.
அன்னிய மண்ணில் அதிகமான தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன் என்று மோசமான வரலாறும் அவரிடம் ஒட்டிக் கொண்டது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் காயம் காரணமாக ஒதுங்கி இருந்த போது அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார்.
அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார். இதன்மூலம் டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு கோலி தயாராகி விட்டார் என்பதை உணர்ந்த டோனி, புத்தாண்டு பரிசாக டெஸ்ட் கேப்டன் பதவியை கோலியிடம் வழங்கியிருக்கிறார். 2008-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் பாதியில் அதாவது 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்ததும் கும்பிளே உடனடியாக ஓய்வு பெற்றார்.
இதனால் அந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து டோனி இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டன் ஆனார். அதே வழியில் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி