அடுத்ததாக உள்நாட்டிலேயே கிரயோஜனிக் என்ஜினை வெற்றிகரமாக தயாரித்து சாதனை படைத்துள்ளது. அத்துடன், மிக நீளமானதும், எடை அதிகம் கொண்டதுமான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் கடந்த 18ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றிகளால் விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் சிறந்து விளங்குகின்றனர்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக பிரபல ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனின் பெயர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்த கவுரவத்தை பெற்றுள்ள முதல் இந்தியர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி