மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய பயணத்தின் போது வீரர்களுடன் மனைவிமார்களை அழைத்து செல்வதற்கு மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததால் விராட் கோலி அதிருப்திக்குள்ளானார். சில தினங்களுக்கு பிறகு பிடியை சற்று தளர்த்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் தங்களது பெண் தோழிகளையும் கூட்டிச் செல்லலாம். ஆனால் ஓட்டலில் ஒரே அறையில் தங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.
இந்த தகவல் கிடைத்த மறுகணமே அனுஷ்கா ஷர்மா புத்தாண்டை தனது காதலருடன் சேர்ந்து கொண்டாட ஆஸ்திரேலியாவுக்கு பறந்து விட்டார். மெல்போர்னில் நேற்று விராட் கோலியின் ஆட்டத்தை அவர் நேரில் கண்டுகளித்தார். கோலி பந்துகளை பவுண்டரிக்கு துரத்தியபோதெல்லாம், அனுஷ்கா கைதட்டி உற்சாகப்படுத்தினார். விராட் கோலி செஞ்சுரி அடித்ததும் தனது ஆசைக்காதலிக்கு அதை சமர்பிக்கும் விதமாக ‘பறக்கும் முத்தம்’ கொடுத்து கிளுகிளுப்பூட்டினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி