செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…

இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…

இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!… post thumbnail image
புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் இதே வசதி கொண்ட எவருடனும் எந்த கட்டணமும் இல்லாமல் பேச முடியும். மேற்கண்ட நிறுவனங்களின் சேவை வசதியால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் முறையிட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வாய்ஸ் கால் பேக் என்ற புதிய பேக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தது. இதனால், பணம் கொடுத்து இந்த பேக்கை வாங்கினால் மட்டுமே, வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை உருவாகும் வாய்ப்பு இருந்தது. இந்த திட்டம் ஆன்ட்ராய்டு போனில் ஸ்கைப், வைபர் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி இலவச வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்திவந்த ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இன்று வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் தன் திட்டத்தை கைவிடுவதாக ஏர்டெல் அறிவித்தது. மேலும் தொலை தொடர்புக் கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் விரைவில் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகளைப் பற்றிய ஆலோசனைகளை வழங்க இருப்பதால் முன்பு வெளியிட்ட வாய்ஸ் கால் பேக் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்றும் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது. இதனால் முன்பு போலவே ஆன்ட்ராய்டு பயனீட்டாளர்கள் இலவசமாக வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி