அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…

அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…

அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!… post thumbnail image
பியாங்யாங்:-அமெரிக்காவை சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்ற சினிமா படம் தயாரித்துள்ளது. தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை கொல்ல முயற்சி நடப்பதை போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தும் இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸ் ஆனது.

முன்னதாக சோனி நிறுவனத்தின் இணையதளத்தை ‘ஹேக்கிங்’ மூலம் வட கொரியா முடக்கிவிட்டதாக அமெரிக்கா கூறியது. அதை வட கொரியா மறுத்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தலையிட்டு இப்படத்தை வெளியிட உதவினார். இது குறித்து வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டள்ளது.

அதில், இந்த சினிமா படம் வெளியாக ஒபாமா தூண்டிவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வார்த்தைகளை மீறி வெப்ப மண்டல காடுகளில் உள்ள குரங்கு போல நடந்து கொள்கிறார். இந்த சினிமா படம் சட்ட விரோதமானது. நேர்மையற்றது. பலமுறை எச்சரித்த பிறகும் அமெரிக்கா தனது நாட்டாமை தனத்தை பின்பற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி