இந்த திட்டத்துக்கு, ‘பெண் குழந்தையை காப்போம். பெண் குழந்தையை படிக்க வைப்போம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும் பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த புதிய திட்டத்தை அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை நேற்று அரியானா முதல்–மந்திரி மனோகர்லால் கட்டார் உறுதிப்படுத்தினார். மோடி தொடங்கி வைக்கும் இந்த புதிய திட்டம் படிப்படியாக இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும்.பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் சம நிலையற்ற பிறப்பு விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி