தத்தித் தத்தி நடக்கும் 3 வயதில் இருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வரும் கிறிஸ்டினா தற்போது அர்மனி, ராபர்டோ கவல்லி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மாடலாக இருக்கிறாள். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சிரிப்பாலும், பெரிய நீல நிறக் கண்களாலும் பெரும் புகழ் பெற்ற இந்தக் குட்டிப் பெண்ணுக்கு பேஸ்புக்கில் 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவரை 5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.இப்படிப்பட்ட புகழ்பெற்ற பெண் குறித்து அவரது தாய் கிளிகேரியா பிமனோவா கூறுகையில், மாஸ்கோவில் உள்ள ஒரு சாதாரணப் பள்ளியில் படிக்கும் மிக சாதாரணமான ஒரு பெண் அவள்.
நட்சத்திர மோகம் என்றால் என்ன என்றே அவளுக்கு தெரியாது. பாப்புலாரிட்டி என்ற வார்த்தையை அவள் கேட்டது கூட கிடையாது. வீட்டிலும் அந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டோம் என்றார். கிறிஸ்டினாவின் சமூக வலைதளக் கணக்கை நிர்வகித்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் பிமனோவா, இதற்காக கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். புகைப்படங்களைப் பார்த்து யாராவது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டால், அது அவர்களுடைய பிரச்சினை என்று அதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி