லிபிரியாவில் இந்த நோயால் 3376 பேர் இறந்து உள்ளனர்.7830 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சியாரோ லியோனில் 2556 பேர் இறந்து உள்ளனர். 8939 பேர் பாதிக்கபட்டு உள்ளனர்.கினியாவில் 1586 பேர் இறந்து உள்ளனர். 2571 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாலியில் 6 பேரும், நைஜீரியாவில் 8 பேரும், அமெரிக்காவில் ஒருவரும் எபோலா நோய்க்கு லியாகி உள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி தற்போது எபோலா நோயை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் கூடிய புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதன் பரிசோதனை இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தகவலை சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் யங் யுஜுன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி