ஆலஸ் என்ற சிறிய உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா எனப்படும் இந்த விமானம், புக்காரமங்காவிலிருந்து மலாகா வழியாக போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்தார். போகோடாவிலிருந்து 395 கி.மீ வடகிழக்கில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், விமானத்தை உடனடியாக புக்காரமங்காவிற்கு திருப்பிக் கொண்டு போக விமானி முயற்சி செய்தார்.
விமான எஞ்ஜினில் ’ஆயில் பிரஷர்’ இல்லாமல் போனதை உணர்ந்த அவர் உடனடியாக விமான போக்குவரத்து கண்காணிப்பகத்திடமும் தகவல் அளித்தார். சில நிமிடங்களில் விமானத்தை தரையிறக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து, அங்குள்ள தரிசு நிலத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. ஆனால் இத்தகவலை அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் இதுவரை உறுதிப்படுத்த வில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி