சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 31ம் தேதி வரும் என படக்குழு தெரிவித்து இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ட்ராக் லிஸ்ட் இது தான் என்று ஒர் செய்தி பரவி வருகிறது. இதில் மொத்தம் 7 ட்ராக் என கூறப்படுகிறது.
அதில் ஒன்று ஏற்கனவே ரிலிஸ் ஆகியுள்ளது, மேலும் ஒரு தீம் மியூஸிக்கும் இடம் பெற்றுள்ளது. இந்த ட்ராக் லிஸ்டில் பாடலின் முதல் வரிகளும் வந்துள்ளது. ஏன் என்ன, மழை வர, இதயத்தை, மாயா பஜார், உனக்கென்ன வேனும், அதாரு அதாரு போன்ற வரிகளில் பாடல் ஆரம்பிக்கும் என கூறுகின்றனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி