அதன்பின் கேப்டன் பிரண்டன் மேக்குல்லம்–வில்லியம்சன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேக்குல்லம் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இலங்கை பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதனால் நியூசிலாந்து அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. மேக்குல்லம் 74 பந்தில் சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அதிவேக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும் கபில்தேவ், அசாருதீன் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார்.
வில்லியம்சன் 54 ரன்னில் அவுட் ஆனார். இருந்தபோதிலும் மேக்குல்லத்தின் வேகம் குறையவில்லை. லக்மல் வீசிய ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி வீளாசி 26 ரன் எடுத்தார்.
அவருக்கு நீசம் நன்கு ஒத்துழைப்பு தர ரன் வேகம் அதிகரித்தது. மேக்குல்லம் 103 பந்தில் 150 ரன்னை அடித்தார். இதனால் மேக்குல்லம் அதிவேக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 195 ரன்னில் அவுட் ஆனார். 134 பந்தில் 18 பவுண்டரி, 11 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 371 ரன்னாக இருந்தது. நியூசிலாந்து வீரர் ஆஸ்லே 153 பந்தில் இரட்டை சதம் அடித்து முதல் இடத்தில் (இங்கிலாந்து எதிராக கிறிஸ்ட்சர்ச் 2001–02) உள்ளார். அவரது சாதனை முறியடிக்க மேக்குல்லத்துக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அவுட் ஆகிவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி