செய்திகள் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய உலகின் அதிக வயதான கொரில்லா!…

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய உலகின் அதிக வயதான கொரில்லா!…

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய உலகின் அதிக வயதான கொரில்லா!… post thumbnail image
ஓஹியோ:-ஓஹியோவில் உள்ள கொலம்பஸ் பூங்காவில் வசித்து வரும் கொரில்லா கோலோவின் பிறந்த நாளை கொண்டாட அங்கு பணியாற்றும் அதிகாரி வேர்க்கடலை வெண்ணெய், ஆப்பிள் சாஸ், தேன், துண்டு துண்டாக நறுக்கப்பட்ட கேரட் மற்றும் தயிரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பொருள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கை வாங்கிவந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் கோலோ அந்த கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியது.

அதுமட்டுமல்லாமல் கோலோவுக்கு சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் கிச்சிலி பழங்களும், தக்காளி பழங்களும் கோலோவுக்கு வழங்கப்பட்டதாக அப்பூங்காவின் பெண் செய்தி தொடர்பாளரான பேட்டி பீட்டர்ஸ் கூறினார். 1956 ஆம் ஆண்டு அப்பூங்காவில் கோலோ பிறந்தது. உலகளவில் மிக அதிக வயதுடைய கொரில்லா இது தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோலோ மூன்று குழந்தைகளுக்கு தாயாவார். அவரது குடும்பத்தின் கிளைகள் 24 ஆக அதிகரித்து நாடு முழுவதும் உள்ள பூங்காக்களில் வலம் வருகின்றன. கோலோவுக்கு மூன்று கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி