இதுகுறித்தது, கே.பாலச்சந்தரின் உறவினர்கள் கூறும்போது, பாலச்சந்தரின் இறுதிச்சடங்கு திடீரென இன்று மாலையே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கமலஹாசனால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், பாலச்சந்தரின் குடும்பத்தாருக்கு கமல் நேரில் வந்து ஆறுதல் தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.
குழந்தை வேடங்களில் நடித்து வந்த கமலஹாசனை ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் ஹீரோவாக உருவாக்கியவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தன்னுடைய படங்களில் கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை பிரபல ஹீரோவாக்கியவர் கே.பாலச்சந்தர். இருவருக்கும் நீண்ட காலமாக குரு-சிஷ்யன் என்ற உறவு இருந்து வருகிறது. கமல் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ படத்தில்கூட கே.பாலச்சந்தர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி