ஐதராபாத்:-ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி கடன் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதற்காக ரேஷன் கடைகள் மூலம் வெள்ளைநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா 20 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ வெல்லம், அரை லிட்டர் பாமாயில், 100 கிராம் நெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.மேலும் நகர்ப்புற பகுதியினருக்கு 4 லிட்டர் மண்எண்ணெயும், கிராமப் புற மக்களுக்கு 2 லிட்டர் மண்எண்ணெயும் மானிய விலையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி