செய்திகள்,விளையாட்டு 2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்து வருகிறது. 3–வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து இருந்தது. தவான் 26 ரன்களுடன் (65 பந்து, 2 பவுண்டரி), புஜாரா 15 ரன்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இன்று காலை தொடங்கிய 4 வது நாள் ஆட்டத்தில், ஆட்டம் தொடங்குவதற்கு முன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது ஏற்பட்ட காயத்தால் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் விராட் கோலியும் புஜாராவும் களம் கண்டனர்.

ஆஸ்திரேலியா அணியின் புயல் வேக பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினார். குறிப்பாக ஜான்சன் அசுர வேகத்தில் வீசி இந்திய வீரர்களை திணறடித்தார். விராட் கோலி(1) ஜான்சன் பந்தில் போல்டு ஆனார். இதைதொடர்ந்து வந்த ரகானே 10 ரன்களிலும் ரோகித் சர்மா ரன் எதுவும் இன்றியும் அடுத்தடுத்து வெளியேறினார். ஜான்சன் 10 பந்துகளில் இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்த இந்திய அணியை கேப்டன் தோனி காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹேசல்வூட் பந்தில் ரன் எதுவும் இன்றி வெளியேறி அனைவரைது எதிர்பார்ப்பையும் தோனி பொய்யாக்கினார். ஓரளவு புஜாரவுக்கு கை கொடுத்த அஷ்வினும் 19 ரன்களில் வெளியேறியதை அடுத்து, தவான் மீண்டும் களம் இறங்கினார்.

அனால் மறு முனையில் தாக்கு பிடித்து ஆடிக்கொண்டு இருந்த புஜாரா (43 ரன்கள்)ஹேசல்வூட்டிடம் வீழ்ந்தார். 8 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த் உமேஷ் யாதவும், தவானும் சரிவை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பாக ஆடிய தவான் 81 ரன்களில் லயன் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஆரோன் 3 ரன்களில் வெளியேறினார். இறுதியில் உமெஷ் யாதவ் 30 ரன்களில் 10 விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அபாரமாக பந்து வீசிய ஜான்சன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்
இதனால் 224 ரன்களுக்கு இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி, 128 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி