மாண்ட்ரியல்:-கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்ட்ரிராய் (50), அவரது மகள் ஜெஸ்சி (16) ஆகிய 2 பேர் காரில் மோதி பலியாகினர்.
அதை தொடர்ந்து எம்மா மீது மாண்ட்ரியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் 10 ஆண்டுகள் கார் ஓட்ட தடை விதித்தும், 240 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி