புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுவாசக்குழாய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இது குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், சோனியா காந்தியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி