நடிகை சமந்தா தற்போது கடுமையான டயட்டில் இருக்கின்றாராம். ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களுக்கு படப்பிடிப்பிற்காக செல்லும் சமந்தா, அங்கெல்லாம் கடுமையான டயட்டை கைப்பிடித்து வரும் வேளையில் சென்னைக்கு வந்தால் மட்டும் தன்னால் டயட்டில் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள இட்லி, தோசை, பொங்க வடைக்கு தான் அடிமையாகிவிடுவதாகவும், டயட் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி வயிறு நிறைய சாப்பிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் சமந்தா சென்னைக்கு ஒரு விழாவுக்கு வந்தபோது அவருக்கு பிரபல ஓட்டல் ஒன்றில் இருந்து அவருக்கு பிடித்த உணவுகள் அளவுக்கு அதிகமாக வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி