செய்திகள்,திரையுலகம் ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…

ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…

ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியது. அங்கு படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், இதுவரை எந்த வினியோகஸ்தரோ, திரையரங்கு உரிமையாளரோ புகார் அளித்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி பட் ராஜு வகுப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிங்கா, ரஜினிகாந்த், அனுஷ்கா அழைப்பின் பேரில் ஊருக்கு வரும் போது, அவரை வழியில் ஒரு புலவர் மறித்து ரஜினியைப் பற்றி ஒரு கவிதை சொல்லும் காட்சி, தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவதாகக் கூறி குகட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், தமிழில் அந்தக் குறிப்பிட்ட காட்சியை ஏற்கெனவே நீக்கி விட்டார்கள். தெலுங்கில் அந்தக் காட்சியை இன்னும் நீக்கவில்லை போலிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் பல திரையரங்குகளில் லிங்கா படத்தை சில நாட்களுக்கு முன்பே படத்தைத் தூக்கி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி