இந்நிலையில் பா.ஜனதாவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பா.ஜனதா கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பா.ஜனதாவில் சேருகிறார்கள். பொங்கலூர் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. மணியும் பா.ஜனதாவில் இணைகிறார். சினிமா இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பா.ஜனதாவில் சேருகிறார்.
நேற்று மாலையில் கட்சி அலுவலகத்துக்கு சென்று தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார். இன்று மாலையில் அமித்ஷா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைகிறார். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் இன்று அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி