காரை அவரே ஓட்டினார். மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச்சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது. இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்டச் செய்து ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டனர். அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடித்தார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் அவர் சிக்கியதையும் தெரிந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரை தவிர்க்க ஜெய் போலீசாரிடம் அவசரமாக அபராத ரசீதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி