செய்திகள்,திரையுலகம் பெண்ணின் கதை (2014) திரை விமர்சனம்…

பெண்ணின் கதை (2014) திரை விமர்சனம்…

பெண்ணின் கதை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ராஜன் நடுத்தர குடும்பத்தின் தலைவர். இவருக்கு 4 பெண் குழந்தைகள். ஒரேயொரு மகனான சுரேஷ், எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசையோடு வாழ்ந்து வருகிறார். டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ராஜன், மற்றும் கனகாவின் சம்பாத்தியத்தில்தான் இந்த குடும்பமே வாழ்க்கையை நகர்த்துகிறது. இதற்கிடையில், ராஜனின் மற்றொரு மகளான விந்தியாவை திருமணம் செய்துகொண்ட பாபு கணேஷ், தனது மனைவிக்கு தெரியாமல், மாமனாரிடம் பணம் பறிக்கும் கேரக்டர். ராஜனின் அப்பா ஜனகராஜ், சுரேஷுடன் சேர்ந்துகொண்டு, வேலை விட்டு தாமதமாக வீடு திரும்பும் கனகாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

இதையெல்லாம் தாங்கிக் கொண்டு, இந்த குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள் ராஜனும் கனகாவும். இந்நிலையில், இவர் வீட்டுக்கு அருகே வசித்து வரும் நாயகன் ராம்கி, கனகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இவர் செய்யும் கண்டக்டர் வேலை ராஜன் வாங்கிக் கொடுத்த காரணத்தினால், அவர் வீட்டிற்கு சென்று பெண் கேட்க முடியாமல் மனதிற்குள் வைத்தே தன் காதலை வளர்த்து வருகிறார்.ஒருகட்டத்தில் தனது காதலை கனகாவிடன் கூறுகிறார் ராம்கி. கனகா தனது அப்பாவிடம் பேசி, சம்மதம் பெறச் சொல்லி அவரை அனுப்பி விடுகிறார். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக ராம்கிக்கே அவளை திருமணம் செய்துகொடுக்க முன்வருகிறார் ராஜன். கனகாவுக்கு திருமணம் செய்ய பணம் இல்லாததால், தாங்கள் வசித்துவந்த வீட்டை விற்க முடிவு செய்கிறார் ராஜன். அந்த வீடு, தனது அப்பாவான ஜனகராஜ் பெயரில் இருப்பதால், அவருக்கு கண் ஆபரேஷன் செய்யப்போவதாக பொய் சொல்லி கையெழுத்து வாங்கி, புதுவீடு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கும் ராம்கி குடும்பத்திற்கே வீட்டை விற்றுவிடுகிறார் ராஜன்.

இதற்கிடையில் திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு போயிருந்த ராஜனின் மகன் சுரேஷுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. ஜெயிலில் இருந்து திரும்பும் சுரேஷ், தன்னுடைய அப்பாவிடம் சென்று வீட்டை விற்றது குறித்து சண்டை போடுகிறான். தனது தாத்தா ஜனகராஜிடம் இதைக்கூறி அவரையும் தனது அப்பாவுக்கு எதிராக திருப்பிவிடுகிறார். இதனால், இருவரும் வீட்டை முறைகேடாக விற்ற குற்றத்திற்காக ராஜன் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.இந்த வழக்கு விசாரணையை ராஜன் எப்படி சந்தித்தார்? வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தது? என்பதை மாறுபட்ட கோணத்தில் கூறியிருக்கிறார்கள். 8 வருடத்திற்கு முன்பாக எடுத்த படம் இது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை அழகாகவும், தெளிவுபடவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாபு கணபதி. ஆனால், இந்த காலகட்ட சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பதுதான் சந்தேகம்.

திரைத்துறையில் காணாமல் போன பல முன்னணி நட்சத்திரங்களை இந்த படத்தில் பார்க்கும்போது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ராம்கி, கனகா, சுரேஷ் ஆகியோர் தங்களின் நேர்த்தியான நடிப்பால் படத்தை சுமைதாங்கி போல் தாங்கிபிடித்திருக்கிறார்கள். ராஜனும் தனது அனுபவ நடிப்பால், நடுத்தர குடும்பத்து தலைவன் படும் வேதனையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

மொத்தத்தில் ‘பெண்ணின் கதை’ பழமையான கதை………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி