டேராடூன்:-இந்திய எல்லைகளை தவறாக சித்தரித்ததாக இந்திய நில அளவை நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம், தாலன்வாலா காவல்நிலைய பொறுப்பாளர் அனில் குமார் ஜோஷி கூறியதாவது:-
இந்தியாவின் சர்வதேச எல்லைகளை கூகுள் மேப்ஸ் தவறாக சித்தரித்திருப்பதாகவும், இதுபற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய நில அளவை நிறுவனம் கடந்த 13-ம் தேதி புகார் அளித்தது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி