பொங்கல் அன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளேன். நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும். டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு இணையாக நடித்து உள்ளேன். இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும். அடுத்து வெளிவரும் ‘உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன்.
அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு ‘ எனக்கு மிக பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய்யுடன், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன். சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கிறார்கள். கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன் என்றார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி