நீதிமன்றம் புரட்சி அரசை அழிக்க சதி செய்தது, அனுமதி இல்லாமல் தொழில் நுட்ப சாதனங்கள் கொண்டுவந்தது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது மனைவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிராஸை விடுதலை செய்ய வேண்டி உடனடியாக மனு அனுப்பினர். ஆனால் இரு நாடுகளுக்கிடையேயான விரோதப் போக்கினால் கிராஸ் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்தது. இந்நிலையில் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவை ஏற்படுத்த இரு நாட்டுத் தலைவர்களிடையே பேச்சு வார்த்தையை ஊக்கப்படுத்தினார். அதன் விளைவாக 18 மாதம் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய் அன்று இறுதிக்கட்டத்தை எட்டியது. வாடிகனில் போப் முன்னிலையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபற்றது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ இருவரும், நீண்ட நாள் விரோதப் போக்கினைக் கைவிட்டு தொலைபேசியில் ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். 45 நிமிடங்களுக்கும் மேலாக இரு நாட்டு உறவுகள் குறித்து ஒபாமா பேசியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டதையடுத்து, ஆலன் கிராஸ், புதன்கிழமை தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் கியூபா கைதிகள் 3 பேரை அமெரிக்கா கியூபாவிற்கு அனுப்ப உள்ளது. இது கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை அல்ல என்று கூறிய அதிகாரிகள் இது மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தெரிவித்தனர். கியூபாவுடனான தனது தூதரக உறவுகளை புதுப்பித்துள்ள அமெரிக்கா, கியூபா தலைநகர் ஹவானாவில் தூதரகம் ஒன்றைத் திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி