செய்திகள்,திரையுலகம் சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…

சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…

சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!… post thumbnail image
பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் ஜெரார்டு டிபார்டி (வயது 65). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வனவிலங்குகளை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்றார். நடுக்காட்டுக்குள் சென்றபோது அவரது வாகனத்தை 2 சிங்கங்கள் வழிமறித்தன. நீண்ட நேரமாகியும் அந்த சிங்கங்கள் அங்கிருந்து செல்லவில்லை.

இதனால் ஜெரார்டு டிபார்டி தனது துப்பாக்கியால் 2 சிங்கங்களையும் சுட்டு கொன்றார். பின்னர் அந்த சிங்கங்களை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டார். ஆனால் இந்த விஷயம் அப்போது யாருக்கும் தெரியாது. தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் சிங்கங்களை சமைத்து சாப்பிட்டதை கூறியிருக்கிறார். இதனால் அவர் மீது வனவிலங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி