செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!… post thumbnail image
லுசான்னே:-கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு இஞ்சியானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்ற சரிதா தேவி அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோற்று போனதாக அப்போட்டிக்கான நடுவர் தவறான முடிவை அறிவித்தார். இதனால் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போதும், தனது வெண்கல பதக்கத்தை கொரிய வீராங்கனையின் கழுத்திலேயே போட்டு விட்டு சரிதா வெளியேறினார்.

சரிதாவின் இந்த நடவடிக்கை, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டது. இது குறித்து விசாரித்த சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சரிதாவுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இதனையடுத்து சரிதாவுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் களமிறங்கினார். சரிதாவுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் முடிவை தடுக்கவேண்டும் என்று அவர் மத்திய விளையாட்டு துறை மந்திரியை சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சரிதா தேவிக்கான தண்டனையை அறிவித்துள்ளது. அதில் அவருக்கு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட விதித்தும், 1000 ஸ்விஸ் பிராங்க்(இந்திய ரூபாயில் சுமார் 66 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு பிறகு குத்துச்சண்டை போட்டிகளில் சரிதா பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி