சென்னை:-கடந்த வருடம் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுத்து வருகின்றனர். இந்த படம் வருவதற்குள் நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வெளிவரும் நிலையில் உள்ளது.
இது குறித்து சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் மிகவும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே ஐ படத்தால் பூலோகம் தள்ளி கொண்டே போகிறது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா போல் வராமல் இருந்தால் கூட ஆச்சரியமில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி