சென்னை:-நடிகை தன்ஷிகா தற்போது காத்தாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள வகமோன் என்ற இடத்தில் நடந்து வருகிறது. பாடல் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். காட்சிகளுக்கான லைட்டிங் உள்ளிட்ட ஏற்பாடுகளை மற்றவர்கள் செய்து கொண்டிருக்கும்போது தன்ஷிகா கேரவனில் இருந்தார். அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள நான்கைந்து இளைஞர்கள் குரூப்பாக வந்தார்கள்.
அவர்கள் அனைவரும் மது அருந்தி போதையில் இருந்திருக்கிறார்கள். இதனால் தன்ஷிகாவின் மானேஜர் அவர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் மானேஜரை தாக்கி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் கேரவனிலிருந்து வெளியே வந்த தன்ஷிகா அந்த இளைஞர்களை தாக்கி இருக்கிறார். அதில் பலர் தப்பிஓட ஒருவர் மட்டும் மாட்டினார். அவரை துவைத்து எடுத்துவிட்டாராம் தன்ஷிகா. பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். புகார் எதுவும் கொடுக்காததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி