சென்னை:-தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முன்னணி பாடலாசியராக திகழ்ந்து வருபவர் நா.முத்துக்குமார். இவர், கடந்த ஆண்டு ‘தங்க மீன்கள்’ படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு கௌரம் கிடைத்திருக்கிறது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது.
இந்த விழா சென்னை, தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர், முனைவர் செல்வின்குமார், நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நா.முத்துக்குமார் பெறும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. இதற்கு முன் 2006 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி