ஹாலிவுட்:-சமீபத்தில் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாப் பாடகியும், நடிகையுமான லேடி காகா கூறுகையில், என் 19ம் வயது முதல் என்னை விட 20 வயது மூத்தவரினால், தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினேன் என்றும் அன்று நடந்ததை விட நான்கைந்து வருடங்கள் கழித்துதான் அதன் பாதிப்பு அதிகமாக எனக்கு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை வருடம் படைப்புத்திறன் மிகுந்த வேலைகளை செய்த நான், இந்த சம்பவம் மூலமாக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என கூறி இந்த கொடூர செயலை செய்த நபரை பற்றி கூற அவர் மறுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி