அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!… post thumbnail image
புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த வண்ணம் உள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தப் பின்னர் இந்த கோரிக்கை மிகவும் பலமடைந்து உள்ளது.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை நாடு முழுவதும் நல்லாட்சி தினமாக போற்றிக் கொண்டாட வேண்டும் என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், வரும் 25-ம் தேதி தனது 90-வது பிறந்த நாளை வாஜ்பாய் கொண்டாட உள்ளார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, இந்த (2013) ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என நம்பத்தகுந்த டெல்லி வட்டாரங்கள் எதிர்ப்பார்ப்புடன் தகவல் தெரிவித்துள்ளன. பாரத ரத்னா விருதினை பெறுவதற்கான தகுதி படைத்த இந்திய அரசியல் தலைவர்கள் வேறு யாருமே இல்லை என பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து கூறி வருவதை இந்த வட்டாரங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி