20 வருடங்களாக உலக அழகியாகவே வலம் வரும் ஐஸ்வர்யராய் சிறந்த நடிகை, சிறந்த சமூக சேவை, சிறந்த குடும்ப தலைவி என்கிற பல பரிமாணங்களில் முன்னணியல் நிற்பதால் அவரை கவுரப்படுத்த உலக அழகிப்போட்டி அமைப்பு முடிவு செய்து அவரை அழைத்தது. அவரை மேடைக்கு அழைத்தபோது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் மேடைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
உலக அழகி பட்டம் பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகும் என்னை நினைவில் வைத்து அழைத்து கவுரவித்ததற்கு நன்றி என்றார் ஐஸ்வர்யா. 20 வருடங்களுக்கு முன்பு அந்த மேடையில் எப்படி நின்றாரோ அப்படியே இப்போதும் இருந்ததுதான் விழாவின் ஹைலைட். அதோடு இப்படி ஒரு சிறப்பு அழைப்பாளரை அழைத்து கவுரவிப்பதும் உலக அழகி போட்டியில் இதுவே முதன்முறை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி