6000 டன் எடை வரை சுமந்து செல்லும் இந்த அதி நவீன நீர்மூழ்கிக் கப்பலில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 83 மெகாவாட் திறனுள்ள அழுத்த நீர் உலை உள்ளது. 3500 கிலோ மீட்டர் வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் கே-4 எனும் நான்கு அணுசக்தி ஏவுகணைகள் அல்லது 700 கிலோ மீட்டர் வரை இலக்கைத் தாக்கி அழிக்கும் போ-5 எனும் 12 ஏவுகணைகளை சுமந்து செல்லும் ஆற்றலை இந்த நீர்மூழ்கி கப்பல் தன்னுள் கொண்டது.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் இரண்டு வருடங்களில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயன்பாட்டுக்கு வரும். அப்படி வரும் நிலையில், உலகில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைத்து, உருவாக்கி அதைப் பயன்படுத்தும் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்தியாவிடம் தற்போது இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சக்ரா அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறனற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி