உலகின் எந்த மூலையிலுள்ள மக்களும் ஆஸ்ட்ரோபோடிக்கின் நிலவில் தரையிறங்க இருக்கும் விண்கலம் மூலம் தங்கள் நினைவு சின்னங்களை அனுப்பலாம் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் தோர்ன்டன் தெரிவித்தார். இதுகுறித்து அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலின் படி, தற்போது சிறிய அளவிலான நினைவு சின்னங்களை தன் முதல் நிலவுப் பயணத்திற்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ’மூன் கேப்சூல்’ எனப்படும் நிலவில் நமது பொருளை பாதுகாக்க பெட்டகம் ஒன்று தரப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.
நாம் அனுப்ப நினைக்கும் பொருளின் எடைக்கேற்ப 460 டாலர் முதல் 26000 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்கலம் தரையிறங்கிய உடன் நம் நினைவுச்சின்னத்தின் புகைப்படமும், வீடியோவும் நமக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி