சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூட்டோடு சூட்டாக படத்தில் இடம்பெற்றுள்ள அதாரு அதாரு என்ற பாடலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்தப் பாடலுக்கு வரவேற்பு கிடைத்தாலும் அஜித் அறிமுக பாடல் சுமார் ரகம் என்று கூறி வந்தனர்.
ஆனால் இது அஜித்தின் அறிமுகப் பாடல் இல்லையாம். படத்தில் வரும் கேங்ஸ்டர் பாடலாம். இதனை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜே தெளிவுப்படுத்தியுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி