இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் கொதித்து போனார்கள். உடனடியாக மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, உஸ்மான்பூர் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
மேலும் உஸ்மான்பூர் போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சுரேஷ் வாகுலேயை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி