செய்திகள்,திரையுலகம் நடிகர் ராஜ்கபூரின் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்!…

நடிகர் ராஜ்கபூரின் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்!…

நடிகர் ராஜ்கபூரின் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்!… post thumbnail image
மும்பை:-இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர் பிரபல நடிகர் ராஜ் கபூர், இந்தியாவுக்குள் சினிமா வந்த இரண்டு வருடங்களில் அதாவது 1935ம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். அவர் இயக்கிய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம்தேரி கங்கா மெய்லி மாதிரியான படங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் பிரபலம். அவரது மகன்கள் ரன்தீர் கபூர், ரிஷி கபூர், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராஜ்கபூர் 1988ம் ஆண்டு தனது 63வது வயதில் காலமானார்.

நடிகர், இயக்குனர், திரைப்பட எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ராஜ்கபூர் 1924ம் ஆண்டு டிசம்பர் 14ம் நாள் பிறந்தார். நேற்று அவருக்கு 90வது பிறந்த நாள். இதையொட்டி அவரது குடும்பத்தினரும், பாலிவுட் திரையுலகமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச நிறுவனமான கூகுள் அவரது 90வது பிறந்த நாளை தனது லோகோவில் வெளியிட்டு அவரை கவுரப்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி